Sunday, December 9, 2012
வியாசர்பாடியில் பர்மா நினைவுகள்

  


வியாசர்பாடியின், மகாகவி பாரதியார் நகர், பி.வி.காலணி சென்னையின் மற்ற பகுதிகள் போல் இல்லாமல், கலாச்சாரம், மொழி, உணவு, உடை, என எண்ணற்ற வித்தியாசங்கள் மற்றும் மாறுபட்ட மனிதர்களை கொண்டுள்ளது. விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்ற நிலை இப்பகுதியில் இல்லை மாறாக கால்பாந்தாட்டத்திற்கு முக்கித்துவம் கொடுக்கின்றனர். பேசும் போது சியா(வாத்தியார்), அசே(தரம் வாய்ந்த), அட்டூ(போலியான), பட்டா(டாலர்), தச்சி(ஊர் தலைவர்) என்று தமிழில் கலந்து பேசுசின்றனர் சிலர். உணவு விடுத்திக்கு சென்றால் அத்தோ, கவ்ஸ்வோ, மொய்ங்கா, மற்றும் பேபியா என்ன! புரியவில்லையா?  இவை எல்லாம் பர்மிய உணவுவகைகளும் தான். இப்பகுதியில் பர்மாவில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
 

  பர்மாவில் 1962களில்  ஏற்பட்ட இராணுவ ஆட்சியின் காரணமாக, அங்கு வாழ்ந்த தமிழர்களை, பர்மாவை விட்டு வெளியேறும் படி அந்த அரசு வலியுறுத்தியது. இதுபற்றி பர்மாவிலிருந்து இடம் பெயர்ந்த தமிழரான கணேஷன் என்பவர் கூறும் போது" என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். ஆனால் நான் பிறந்தது பர்மாவில் தான். எங்கள் குடும்பம் விவசாயம் செய்து வந்தது பர்மாவில். விவசாயத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பால் பர்மாவில் கொடுகட்டி பறந்தனர் தமிழர்கள். விவசாயம் மட்டுமல்லாமல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த 63களில் போது மாலை ஆறு மணி நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அடுத்தடுத்து பணத்தை குப்பைகளில் வீசி, எரித்தனர். தமிழர் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிப்படைந்தது. தனி வரி விதித்தனர். சொத்துக்கள் பரிமுதல் செய்தனர். இவற்றை எதிர்த்து பர்மாவின் தமிழ் பத்திரிக்கைகளான ரசிக ரஞ்சனி, தொண்டன் தொடர்ந்து எழுதி போராடினர். கப்பலை விடுங்கள், கண்ணீரை துடையுங்கள் என்ற முழக்கமிட்டனர் பர்மிய தமிழர்கள். இதன் விளைவாக எஸ். எஸ். முகமதி, முஷபாரி, இஸ்லாமியா ஆகிய மூன்று கப்பல் மூலம் தமிழ்நாடு திரும்னோம்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வியாசர்பாடி, கும்மிடிப்பூண்டி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அகதிகளாக குடியேற்றியது இந்திய அரசாங்கம். தஞ்சாவூரில் பர்மா கலாணியை உருவாக்கினோம். என்ன வேலை செய்யலாம்? என்று குழம்பியவர்களாக இருந்தோம். ஓட்டுனர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அரசாங்கம் அன்றாட செலவுக்காக படி கொடுத்தா£ர்கள். சிலர் வேலை கிடைக்காமல் பல பிரச்சினைகளை படிபடியாக சந்திக்க நேர்ந்தது, எங்களுடைய சந்ததியில் சிலர் தீய வழியை தேர்ந்தெடுத்தனர். இதனால் சமுதாயத்தில் வடசென்னை என்றாலே கொலை, கொள்ளை, கடத்தல் என மாறியது என்றார். மேலும் பர்மாவிர்க்கும், தமிழ் நாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்றால் கலப்படம் என்பதை தமிழ்நாட்டில் தான் முதலில் பார்த்தோம். அரிசியில் கல் இருந்தது. அங்கு பச்சரிசி உணவுதான் கிடைக்கும். வீடுகள் பர்மாவில் பெரும்பாலும் தேக்கு மரக்கட்டைகளால் தான் கட்டப்பட்டிருக்கும். தேனீர் கூட பச்சை தேயிலையை தான் உபயோகிப்பர். மனிதர்களிடம் மரியாதை அதிகம் இருக்கும், பேச்சில் தன்மையிருக்கும். பர்மா சேர்ந்தவன் என்பதற்கு சட்டையின் மேல் லூங்கியை கட்டியிருப்பது முக்கியமான அடையாளம் அதோடு தோளின் குறுக்காக ஒரு ஜோல்னா பையையும் வைத்திருப்பர். பர்மாவில் தமிழ்நாட்டிலிருந்து சென்றால் தச்சி(ஊர்தலைவர்) யிடம் அனுமதி வாங்கி தான் தங்கமுடியும். தமிழ்நாட்டை போல் சுதந்திரமாக இருக்க முடியாது. மற்ற நாடுகளில் அடிமையாக இல்லாமல், தமிழகத்திற்கு வந்து வாழ்வது கஸ்டமாக இருந்தாலும் பிரிந்த தன் தாயிடம் மறுபடியும் சேர்ந்து விட்டோம் என்று நிம்மதியாக மனதிற்கு கிடைத்துள்ளது என்றார். இவ்வாறு பர்மாவை விட்டு வந்தாலும், பர்மாவின் வாழ்கை எங்கள் மனதில் எந்தளவுக்கு வேருன்றி இருப்பதற்கு மகாகவி பாரதியார் நகரில் உள்ள பீலிக்கான் முனிஸ்வரர் ஆலயம், (பீலிக்கான் பர்மாவில் உள்ள நகரம் ஆகும்). பி.வி.காலணியின் மாலை நேர உணவுவிடுதிகள் இவைகளே முக்கிய சான்றுகள். இங்கு விற்கும் பொருள்களில் கலப்படமின்மை ஆகியவையே சான்றுகள் ஆகும். இவையே பர்மாவின் நினைவாக நாங்கள் ஏற்படுத்திக் கொண்டவை. வளர்த்த அன்னையை பிரிந்து, பெற்ற அன்னையிடம் வாழ்ந்தாலும், பர்மாவில் வாழாது போனது இழப்பு தான் என்று வருத்ததுடன் தெரிவித்தார்".

No comments:

Post a Comment