Sunday, December 9, 2012


 நூலகம் என்றால் வரலாறு புத்தகங்கள் நிறைய இருக்கும். ஆனால், நூலகமே வரலாறாக திகழ்வது சென்னை இலக்கிய சங்க நூலகமாகும். இது நுங்கம்பாக்கத்திலுள்ள கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ அலுவலகத்தில் இந்த கட்டிடம் இருக்குமிடம் செடி, கொடிகள் படந்து காடு போல் காட்சியளிக்கும் வரவேற்ப்பறையின் வாசலில் சென்னை இலக்கிய சங்கம் ஸ்தாபிதம்; 1812 என்ற பெயர்பலகை இருக்கிறது.
 
ஆரம்பக்காலத்தில் சென்னை கோட்டையின் பின்புறம் இயங்கி வந்த நூலகம் 1875 ம் ஆண்டு கன்னிமாரா நூலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின் 1906 ம் ஆண்டு தற்போது இருக்கும் இடத்திற்கு இட மாற்றப்பட்டது. சென்னையில் பொதுப்பணித்துறையால் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்திற்கு வாடகையாக தற்போது 72ரூபாய் மட்டுமே பொதுப்பணித்துறை பெற்று கொள்கிறதாம்.  
விடுதலை போராட்டத்தில் இருக்கும்போது இந்தியர்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். 1868ம் ஆண்டு பதிவேட்டில் திருவிதாங்கூர்மகாராஜா, ரங்கநாத முதலியார் உள்ளனர். சுபாஷ் சந்திரபோஷ் உறுப்பினராக விண்ணபித்த விண்ணப்பம் அவரின் கையெழுத்தோடு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர் பாலம்மாள் , மற்றும் நாட்டிய தாரகை ருக்குமணிதேவியின் கணவர் அருண்டேல் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளதாகவும் 170 உறுப்பினர்களாக உள்ளனர். முதியோர் தான் அதிகம் உபயோகப்படுத்திவருகின்றனா;. மாணவர்கள் அவ்வளவாக வருவதில்லை என்று தொரிவித்தார். இந்நூலகத்தின் ஆரம்ப கட்ட செயல்பாடுகள் குறித்து அறிய மாண்டீத்மெக்லைன் எழுதிய சிறு புத்தகம் உள்ளது. இவரின் பெயரில் தான் மாண்டீத் சாலை என்று பெயரிடப்பட்டது. இந்நூலகத்தில் இருக்கும் வரலாற்று ஆவணங்கள், அரிய புகைப்படங்கள், உலக வரைபடங்கள் என் வரலாற்றின் களஞ்சியமாகவே திகழ்கிறது.

நமெட்ராஸ் ஜொ;னல் ஆப் லிட்ரேட்சா; ஆப் சையின்ஸ்க பருவ இதழ் இந்நூலகம் நடத்தியது 1883 -1984 ம் ஆண்டு வரை, சுமார் 60 வருடம் வரை வெளியான இந்த இதழ் சென்னை பல்கலைகழகத்தில் சமஸ்கிருத வகுப்பிலிருந்த ஜெர்மனியர்களால் இப்பருவஇதழ் வெளிவர பெரும்பங்காற்றினர். இதழின் பிரதி இன்றும் நூலகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
சென்னை இலக்கிய சங்க நூலகத்தில் 1858 வெளியான உலக வரைபடம் .விரித்தால் இருவா; படுத்து கொள்ளலாம் மடித்து மடித்து வைத்திருக்கிறார்கள். 30க்கும் மேற்ப்பட்ட வரைபடங்கள் உள்ளது. மேலும் கிஸ்ட்ரி ஆப் பக்கிங்காம் கௌ£ல் ப்ராஜெக்ட் (1898), லத்தீன் மொழியில் வெளியான அரிஸ்டாட்டில் ஓபானியா (1680) ட்ராவல்ஸ் இன் இந்தியா கேப்டம் டி டிரைட் எடுத்த புதுக்கோட்டை, மதுரை புகைப்படங்கள் என்று ஆவணங்கள் அதிகமாகவே உள்ளன. மேலும் இச்சங்கம் பற்றி மெட்ராஸ் சொசைட்டி எ கிஸ்ட்ரி 1812-1984 விரிவாக பதிவு செய்திருக்கிறார். என். எஸ். ராமஸ்வாமி அவர்கள்.
நூலகர் இன்றைய இந்நூலகத்தின் நிலை குறித்து  கூறும்போது தற்சமயம் உறுப்பினராக 600ரூபாய் செழுத்தவேண்டும் ஒரு நாளைக்கு உறுப்பினர் 5பேர் வருவாங்க பார்வையாளர்கள் பத்து பேர் வருவாங்க தமிழ் புத்தகங்கள் இல்லை என்பதும் இங்கு உறுப்பினர்கள் குறைவிற்கு காரணம். மின் விளக்குகள், பதிவிறக்கம செய்யும் இயந்திரம் ஆகிய வசதிகள் இல்லை தினசரி எதுவும் இங்கு வருவதில்லை கடற்படையில் வேலை செய்த மோகன்ராமன் சென்னை இலக்கிய சங்கததை நிர்வாகித்து வருகிறார். சேர்மேனாக கேம லதாரனவதி என்ற சமூகசேவகர் உள்ளார்.
 இந்நூலகம் நன்கொடையாலும் உறுப்பினர் சந்தா மற்றும் திரைப்பட சூட்டிங் வாடகை என்று இயங்கிவருகிறது. டெல்லி கல்ச்சுரல் துறையிலிருந்து நூல்கள் மற்றும் கட்டிட பராமாரிப்பு என்ற 2 லட்சம் கிடைத்தது. 1978 ல் அரிய வகை புத்தகங்கள் கண்காட்சி இந்நூலகத்தில் நடத்தப்பட்டது. நூல்கள் பாதுகாப்பு, ஆவணங்கள் பாதுகாப்பு தான் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நூல்களை தேவை, தேவையில்லாதது என்று பிரித்து பைண்டிங் செய்கிறார்கள். இந்த பைண்டிங் செய்பவர் ரங்கநாதன். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் பிளாஸ்டிக் கவரால் பைண்டிங் செய்யப்படுகிறது என்கிறார்.
 இன்னும் அறியப்படாத எத்தனையோ நூல்கள் அங்கு இருக்கின்றன. ஏணிகள் மேல் ஏறி சென்று பார்த்தால் புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. புத்தக வாசனை வீசுகிறது. இவ்வாறு இந்தியாவின் முதல் வாடகை நூலகம் நம் சென்னையில் அமைந்திருப்பது நமக்கு பெருமை தான். அதே போல் இரண்டு நூற்றாண்டுகளை கடந்த இந்நூலகத்தின் புத்தகத்தை அரிய புகைப்படங்களை அரிய ஆவணங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவாரின் கடமையாகும்.

No comments:

Post a Comment